Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே பொதுக்கிணறு சீரமைக்க கோரி கிராம மக்கள் வலியுறுத்தல்.


பாலக்கோடு, ஜூன் 1:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரணஹள்ளி ஊராட்சியில் உள்ள ரெட்டியூர் கிராமத்தில், கடந்த நால்வது ஆண்டுகளாக பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்த பொதுக்கிணறு, பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது.

திறந்தவழிக் கிணறாக இருந்ததால், சிலர் அதில் குப்பை மற்றும் கழிவுகளைப் போட்டுவர, தற்போது கிணறு மாசடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுவரை கடும் வறட்சி காலங்களிலும் நீர் வற்றாத நிலையில் இருந்த இக்கிணறு, தற்போது முழுமையாக கழிவுகளால் நிரம்பியுள்ளது.


இதைத் தொடர்ந்து, கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிணற்றை தூறுவாரி சுத்தம் செய்ய வேண்டும். மேலும், எதிர்காலத்தில் மீண்டும் மாசுபடாமல் இருக்க பாதுகாப்பு மூடியுடன் கிணறை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies