Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 முதல்..


பாலக்கோடு, ஜூன் 1:

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி முதல் இரண்டாம் சுழற்சி முறையில் நடைபெறவுள்ளது.


முதல் சுழற்சியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பொது நிர்வாகம், இளமறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புள்ளியியல், உளவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, மிண்ணனு மற்றும் தொடர்பியல், இளவணிகவியல், இளவணிக நிர்வாகவியல், சமூகப்பணி உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.


இரண்டாம் சுழற்சியில் புதியதாக தொடங்கப்பட்ட வரலாறு, இளமறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினிபயன்பாடு, இளவணிகவியல் மற்றும் இளவணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகள் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்றுவிக்கப்படும்.


மேலும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் என்.சி.சி. மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு, ஜூன் 4 முதல் 14 ஆம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் தீர்த்தலிங்கம் அறிவுறுத்தியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies