Type Here to Get Search Results !

மும்பை போலீஸ் பெயரில் மிரட்டி ரூ.22.40 லட்சம் மோசடி – குற்றவாளிகளை கைது செய்து பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்.


தருமபுரி, ஜூன் 1:

மும்பை போலீசராக ஃபோன் செய்து, கூரியரில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக மிரட்டி, தருமபுரியை சேர்ந்த ஜெயக்குமாரிடம் ரூ.22,40,800 மோசடி செய்த சம்பவம் அர்ப்பணிப்பு மற்றும் காவல் துறையின் விடாமுயற்சியால் திருப்பிப் பெறப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட ஜெயக்குமார் கடந்த ஜூன் மாதத்தில் தருமபுரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில், குற்ற எண் 18/2024-ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஸ்வரன் அவர்களின் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டது.


தொடர்ந்து, அந்தக் குழு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்று, வழக்கில் தொடர்புடைய சுசில் பைரவா (23) என்ற சந்தேகநபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது. இவ்வழக்கின் தொடர்ச்சியாக, நீதிமன்ற அனுமதி பெற்று, மோசடியில் இழந்த ரூ.22,40,800 பணம் மீட்கப்பட்டது. அந்த தொகை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. R. சதீஷ், இ.ஆ.ப., அவர்களால் பாதிக்கப்பட்ட ஜெயக்குமாருக்கு ஒப்படைக்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies