Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டியில் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.


பாப்பாரப்பட்டி, ஜூன் 2:

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில், தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா, பேரூராட்சி செயலாளர் ரமேஷ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா, தமிழ்நாடு வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் ஆகியோர் அறிவுறுத்தலின் அடிப்படையில், பாப்பாரப்பட்டி பேரூராட்சி த.வே.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.


விழாவில், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உயர் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சால்வை போற்றி, கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா, கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


மேலும், மேற்கு மாவட்ட இணை செயலாளர் வீரமணி, பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் சத்யா, விவசாய அணி மணி, சுற்றுச்சூழல் அணி செந்தில் குமார், தொண்டரணி சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி தினேஷ், விமல், அதியமான், தருமபுரி நகர செயலாளர் சிட்டி சுரேஷ், கொள்கை பரப்பு அமைப்பாளர் சந்தோஷ், இணையமைப்பாளர் லோக்நாத், வர்த்தக அணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழா மாணவ, மாணவிகளின் மன உறுதியையும், கல்வியின் மீது ஆர்வத்தையும் மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies