Type Here to Get Search Results !

மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா.


பாலக்கோடு, ஜூன் 2:

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் மணியகாரன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், புத்தகப்பை மற்றும் சீருடை ஆகியவை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பி. ஆனந்தன் தலைமையில், பள்ளியில் பயிலும் 70 மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கு தலைமை ஆசிரியர் விஜயா முன்னிலை வகித்தார்.


இந்த நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் தெய்வம், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இந்து, தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகி இருசன், சமூக செயல்வீரர் கவுண்டர் கணேசன், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கல்வி நலத்திட்டத்தின் தொடர்ச்சியாக, மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies