Type Here to Get Search Results !

பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது.


பாலக்கோடு, ஜூன் 2:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கசியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் (31), வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிள் கடந்த இரவு திருடு போயிருந்தது. இதுகுறித்து மணிகண்டன் பாலக்கோடு போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த நேரத்தில் தக்காளி மார்க்கெட் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் தருமபுரி மாவட்டம் குப்பூர் அருகே உள்ள கொல்லகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (22) என்பதும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை அவரே திருடியதும், முன்னர் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தசாமி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies