Type Here to Get Search Results !

மகேந்திரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதியதில் இருவர் பலி - ஒருவர் படுகாயம்.



பாலக்கோடு, ஜூன் 10-

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த சிறுகலூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (55) இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிள் தர்மபுரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (45), சக்திவேல் (40) ஆகியோர் பின்னால் அமர்ந்து சென்றனர். அனைவரும் கூலி தொழிலாளிகள்.


மகேந்திரமங்கலம் அருகே ஜிட்டாண்டஅள்ளி தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஆம்னி பேருந்து இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் லட்சுமணன், சக்திவேல் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.முனியப்பன் படுகாயமடைந்தார்.


தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றும்  முனியப்பனை மீட்டு சிகிச்க்காக சேர்த்தனர். விபத்து  குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆம்னி பஸ் மோதி கூலி தொழிலாளிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது. 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies