Type Here to Get Search Results !

பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் – திமுக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா.


பாலக்கோடு, ஜூன் 6: 4

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் உள்ள கரம்பு கிராமத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திமுக மத்திய ஒன்றியம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையிலேயே விழா சிறப்பாக நடைபெற, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜபாட்ரங்கதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் அற்புதம் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் சிறப்பு அழைப்பாளராக, தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.


இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதி மொழி பொதுமக்களிடையே எடுத்துக் கொள்ளப்பட்டது. பூமியின் இயற்கை வளங்களை வீணாக்காமல் பாதுகாப்பதும், நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பதும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்த விழாவில் மக்கள் நல பணியாளர் பன்னீர்செல்வம், ஊராட்சி செயலாளர் கோவிந்தன், முன்னாள் வார்டு உறுப்பினர் பூபதி, தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies