Type Here to Get Search Results !

சின்னப்பள்ளத்தூர் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் விழா.


பென்னாகரம், ஜூன் 05-

பென்னாகரத்தை அடுத்த செங்கனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.


நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுத்தனர். இதில், சுற்றுச்சூழலுக்கேற்ப வாழும் பழக்கங்களை மாணவர்கள் நாடி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


மேலும், மரக்கன்றுகள் நடுதல், மின்சார மற்றும் குடிநீர் சிக்கனம், நெகிழிப் பொருட்கள் தவிர்ப்பு, மீண்டும் பயன்படும் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வுப் பேச்சுகள் நடைபெற்றன. பிறகு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வளர்க்கும் முயற்சிக்கு தொடக்கம் வைக்கப்பட்டது.


இதனையடுத்து, மாணவர்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டு, நெகிழிப்பைகளுக்குப் பதிலாக அதைப் பயன்படுத்தும் அவசியம் வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி, சத்துணவு பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies