Type Here to Get Search Results !

கடத்தூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


தருமபுரி, ஜூன் 5 – 

தருமபுரி மாவட்டம் கடத்தூரில் செயல்பட்டு வரும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 கல்வியாண்டுக்கான முதலாம் மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினியரிங் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பம் (DMT) உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை பெறலாம்.


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டுக்கும், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 10ம் வகுப்பு முடித்து 2 ஆண்டுகள் ஐடிஐ முடித்தவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டுக்கும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். விருப்பமுள்ள மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், கல்லூரியிலும் நேரில் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


இக்கல்லூரியில் நவீன ஆய்வகங்கள், தனித் தனியாக விடுதி வசதி, குறைந்த கல்விக் கட்டணம், கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி வசதிகள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் விபரங்களுக்கு 9500008791 (முதல்வர்), 9080139880, 8508168390, 7338900733, 04346–265355 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies