Type Here to Get Search Results !

புரத்தூர் கிராமத்தில் கோபுர மின்விளக்கு செயலிழப்பு – பொதுமக்கள் ஆதங்கம்.


பாலக்கோடு, ஜூன் 15-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திலுள்ள பி.செட்டி அள்ளி ஊராட்சி, புரத்தூர் கிராமத்தில் பல மாதங்களாக கோபுர உயரம் கொண்ட மின் கம்பத்தில் அமைந்துள்ள மின்விளக்கு எரியாமல் இருக்கிறது. இது தொடர்பாக ஊராட்சி செயலாளரிடம் கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இரவில் மக்கள் நடமாட உசிதமான வெளிச்சம் இல்லாததால், பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பும் நலனும் கருதி, கோபுர மின்விளக்கை உடனடியாக சீரமைத்து செயல்படுத்த வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies