Type Here to Get Search Results !

பாலக்கோடு மேக்லாம்பட்டி ஏரியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா.


பாலக்கோடு, ஜூன் 15-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகிலுள்ள மேக்லாம்பட்டி ஏரி சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. இந்த ஏரி, பாலக்கோடு, கடமடை, கரகத அள்ளி, செம்மநத்தம், பேளார அள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீராதாரமாக பயன்பட்டு வருகிறது. இதே நேரத்தில், இந்த ஏரியின் சுற்றுவட்டாரத்தில் சீமைக்கருவேல் மரங்கள் வெகுவாக வளர்ந்து, காடு போல் காட்சி அளித்து வந்தது. இதனால் பொதுமக்கள் நீண்ட நாட்களாகவே கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்நிலையில், தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ் இ.ஆ.ப. அவர்களின் ஆலோசனையின் பேரில், பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து, மேக்லாம்பட்டி ஏரியை சுற்றி உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை முன்னெடுத்த டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தர்மம் அறக்கட்டளை, ஜெயம் சமுதாய வள மையம், ஆதி பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. இந்த முயற்சிக்கு தமிழக முதல்வர் வழங்கும் "நீர்நிலை பாதுகாவலர் விருது" மாவட்டத்துக்கு வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, ஏரியை சுற்றி 1000 மரக்கன்றுகள் நடும் விழா 2025 ஜூன் 16 அன்று பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஸ்ரீராம் சில்க்ஸ் உரிமையாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன், அரிமா சங்க பொருளாளர் முத்து, நகை கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிறுவனர் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். மரநடும் விழாவின் தொடக்கமாக, பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, மருத்துவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு ஆரம்பித்தனர்.


இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் சின்னமுத்து, சங்கர், சிவா, மகேந்திரன், செல்வராஜ், ராஜரத்தினம், செல்வி, ஆதிமூலம், தமிழரசு, வாசகர், சதிஷ், சீனிவாசன், மணிகண்டன், பழனி, குணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies