Type Here to Get Search Results !

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் செய்த தருமபுரி மாணவி.


தருமபுரி, ஜூன் 15 –

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவ கூந்தல் தானம் செய்வது போன்ற மனிதநேய செயல், தருமபுரியில் உள்ள பள்ளி மாணவியாலால் இன்று செய்திடப்பட்டது. தருமபுரி அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவி சஜூந்தனா, புற்றுநோய் நோயால் தலைமுடி உதிரும் குழந்தைகளுக்காக தனது கூந்தலை தானமாக வழங்கி சிறந்த மனிதநேயத்தையும், சமூக நலவாழ்விற்கான உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.


இவளது பெற்றோர் புவனேஸ்வரி மற்றும் காவல்துறையில் பணியாற்றும் குமார் ஆகியோர் இச்செயலுக்கு முழுமையான ஆதரவாக இருந்தனர். இதற்காக மை தருமபுரி அமைப்பினர், சஜூந்தனாவையும், அவரது பெற்றோரையும் பள்ளி நிர்வாகத்தையும் பாராட்டினர். ‘மை தருமபுரி’ என்ற மனிதநேய அமைப்பு, தமிழகமெங்கும் புற்றுநோய் நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தேவையான முடி தட்டணுக்கள், அவசர ரத்ததானம் உள்ளிட்ட சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது. இது போன்ற தன்னார்வ சேவைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த கூந்தல் தான விழிப்புணர்வும் நடத்தப்படுகிறது.


இந்நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பின் செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர் சையத் ஜாபர், சண்முகம், தன்னார்வலர்கள் கணேஷ், அம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவியின் சேவையை பாராட்டினர். இது போன்ற சேவைகள் சமூகத்தில் நல்ல சிந்தனைகளை பரப்பும் வகையில் அமைந்துள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies