Type Here to Get Search Results !

தக்காளி விலை உயர்வு – பாலக்கோடு விவசாயிகள் மகிழ்ச்சி.


பாலக்கோடு, ஜூன் 16-

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் இயங்கும் புகழ்பெற்ற தக்காளி சந்தையில், தக்காளி விலை சென்ற சில நாட்களாகவே கணிசமாக உயர்ந்துள்ளது. மாரண்டஅள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் தக்காளி விளைச்சலை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.


தொடர் மழையால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ள நிலையில், தற்போதைய சந்தை விலை ஒரு கிலோக்கு ரூ.18 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளிக்கு ரூ.300 வரையும் விலை நிலவுகிறது. இது கடந்த ஆறு மாதங்களில் இருந்து தக்காளிக்கு இருந்த குறைந்த விலையை காட்டிலும் இருமடங்கு அதிகமாகும்.


விலை உயர்வால் விவசாயர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்நிலையில், தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பாலக்கோடு சந்தையை நாடி, தக்காளிகளை கொள்முதல் செய்து கொண்டுள்ளனர். ஆனால் வரத்து குறைவால் சில மொத்த வியாபாரிகள் ஏமாற்றம் தெரிவிக்கின்றனர்.


விலை உயர்வு, நீண்ட நாட்களாக இழப்பில் இருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், சாகுபடியில் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நிலையான விலையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வலுப்பெற்று வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies