Type Here to Get Search Results !

முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் இராமகொண்டஅள்ளி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி – பொதுமக்கள் பாராட்டு.

ஏரியூர், ஜூன் 16-

தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்துக்குட்பட்ட இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 375 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். மேலும், தேசிய ஊரக மற்றும் மாநில ஊரக திறனாய்வு தேர்வுகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், தற்போது முதலமைச்சர் திறனாய்வு தேர்விலும் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



இந்த வெற்றியால் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகையை பெற உள்ளனர். மாணவர்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன், தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், மூத்த ஆசிரியர் சுப்பிரமணி, துணைத்தலைவர் இளையராஜா மற்றும் பொதுமக்கள் பாராட்டி, சால்வை அணிவித்து வாழ்த்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies