Type Here to Get Search Results !

மக்கள் வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்.


பென்னாகரம், ஜூன் 16-

மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் நிகழ்வுகள் நடைபெற்றன.


மடம் கிராமத்தில் தொடங்கிய இந்த மக்கள் சந்திப்பு, கூத்தப்பாடி, பொச்சாரம்பட்டி, ஜங்கமயனூர், சின்னப்பள்ளத்தூர் பகுதிகள் வழியாக பி.அக்ரஹாரத்தில் நிறைவு பெற்றது. அதேபோல், திங்கட்கிழமை காலை ஊட்டமலை கிராமத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.


இந்த இயக்கத்தின் போது, மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை முழுமையாக வழங்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தர்மபுரி மாவட்டத்தில் ஒக்கேனக்கல் உபரி நீர் அனைத்து ஏரி, குளங்கள், குட்டைகளிலும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


மக்கள் மத்தியில் இந்த கோரிக்கைகள் மற்றும் நிலைமைகள் குறித்து பிரச்சாரம் செய்யும் நடவடிக்கையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று இயக்கத்தை முன்னெடுத்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies