Type Here to Get Search Results !

அரசு பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


தருமபுரி, ஜூன் 13:

தருமபுரி மாவட்டம் நாகவதி அணை அருகே 13.06.2025 அன்று காலை 9.00 மணியளவில் அரசு பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்தும் எதிரெதிராக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 தனியார் கல்லூரி மாணவிகள், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் 5 அரசு பேருந்து பயணிகள் உள்ளிட்ட மொத்தம் 21 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் அவர்களுக்கு X-RAY, CT SCAN உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.


விபத்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த மாணவிகள் மற்றும் பயணிகளை தனித்தனியாக சந்தித்து அவர்களது உடல்நல நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், உரிய சிகிச்சை வழங்குமாறு மருத்துவ குழுவினருக்கு உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies