தருமபுரி, ஜூன் 29 (ஆனி 15) –
தருமபுரி மாவட்டம் பஞ்சபள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட கூத்தாண்டஅள்ளி அருகே, தொப்புள் கொடியுடன் உயிரிழந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடல், அடையாளம் தெரியாத நிலையில் விலங்குகளால் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. தகவலின்பேரில் பஞ்சபள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
குழந்தையின் உடல் தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர், மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் சார்பில் அமைப்பின் நிறுவனர் சதீச்குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தி நல்அடக்கம் செய்தனர்.