Type Here to Get Search Results !

பொம்மிடியில் வரும் நாளை (சனிக்கிழமை) ரயில்வே சேவைக்காக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


பொம்மிடி,  ஆடவை (ஆனி) 14-

தருமபுரி மாவட்டம், பொம்மிடி ரயில்வே நிலையம் முன்பாக வருகின்ற நாளை சனிக்கிழமை (ஜூன் 28, ஆனி 14) காலை 9:30 மணி அளவில், பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில்பயணிகள் நலச்சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.


இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படும் முக்கிய கோரிக்கைகள்:

  • அடிக்கடி ரத்தாகும் அரக்கோணம் – சேலம் ரயில் சேவையை தொடர்ச்சியாக இயக்க வேண்டும்.

  • புதிய ரயில் நிறுத்தம் பற்றிய நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

  • அம்ரித் பாரத் திட்ட பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • ஈரோடு – ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயில் சரியான நேரத்திற்கு இயக்கப்பட வேண்டும்.

  • தருமபுரிக்கு பதிலாக பொம்மிடி வழியாக செல்கின்ற ரயில்களுக்கு பொம்மிடியில் தற்காலிக நிறுத்தம் வழங்க வேண்டும்.


பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு மற்றும் உரிமைக்குரிய குரலாக இந்த ஆர்ப்பாட்டம் இருக்கும் என நலச்சங்கத்தின் தலைவர் A. ஆசாம்கான், செயலாளர் பா. ஜெபசிங், பொருளாளர் மு. முனிரத்தினம் ஆகியோர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies