Type Here to Get Search Results !

ஏ.ஜெட்டிஅள்ளியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.


நல்லம்பள்ளி, ஜூன் 1:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், ஒட்டப்பட்டி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட பட்டா மாறுதல் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


ஏ.ஜெட்டிஅள்ளி திட்ட பகுதியில் வீடுமனைகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து கிரயம் பெற்ற உரிமையாளர்கள், பட்டா தங்கள் பெயரில் மாறாமல் வாரியத்தின் பெயரிலேயே இருந்ததால், இந்த நிலையைச் சரி செய்யும் நோக்கில், அரசு சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இச்சிறப்பு முகாமில், கிரயம் பெற்ற 200-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் தங்களுடைய கிரய பத்திரம், வில்லங்கச் சான்று மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் பங்கேற்று மனு வழங்கினர். ஆவணங்கள் சரியாக இருப்பின், அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.


பின்னர், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விஜயம் செய்த ஆட்சித்தலைவர், அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவுகளைக் கண்காணித்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும், மருத்துவர்களிடம் மருத்துவ உபகரணங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.


இந்நிகழ்வுகளின் போது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, அரசு மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) மரு. சிவக்குமார், நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies