Type Here to Get Search Results !

ஏ.ஜெட்டிஅள்ளியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் – பொதுமக்கள் பயன்பெறலாம்.



நல்லம்பள்ளி, மே 31:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள ஏ.ஜெட்டிஅள்ளி கிராமத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனைகள், தற்போது பட்டா பெயர் மாற்றம் செய்யப்படாமல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பெயரிலேயே உள்ளன.

இந்த நிலையை மாற்றும் நோக்கில், உரிமையாளர்களுக்காக பட்டா மாற்ற சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில், வீட்டுமனைக்கான கிரயப் பத்திரம், வில்லங்கச் சான்று மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் வருகை புரிந்து மனு கொடுத்து, பட்டா மாற்றம் செய்து பயன்பெற மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


சிறப்பு முகாம் 01.06.2025 அன்று, ஓட்டப்பட்டி ராஜகணபதி கோயில் அருகிலுள்ள சமுதாய கூடத்தில் நடைபெறவுள்ளது. குறிப்பாக, வள்ளுவர் நகர், ஏ.ஜெட்டிஅள்ளி திட்டப் பகுதியில் வீடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து கிரயம் பெற்றவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இது தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் அறிவுறுத்தியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies