Type Here to Get Search Results !

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 கல்வியாண்டுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு அறிவிப்பு


பென்னாகரம், ஜூன் 9:

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தருமபுரி மாவட்டம் – 636803, 2025-2026 கல்வியாண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட முதல் சுற்று பொது கலந்தாய்வு பின்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது:

📅 காலம்: 10.06.2025 முதல் 13.06.2025 வரை
📍 இடம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பென்னாகரம்


பாடப்பிரிவுகள் மற்றும் கலந்தாய்விற்கு வரவேற்கப்படும் மாணவர்கள்:

  • பி.ஏ. ஆங்கிலம்

  • பி.எஸ்.சி. கணிதவியல்
    ➤ இவ்விரு பாடப்பிரிவுகளுக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவியர்களும் கலந்தாய்விற்கு அழைக்கப்படுகிறார்கள்.

  • பி.ஏ. தமிழ்

  • பி.காம்

  • பி.எஸ்.சி. கணினியியல்
    ➤ மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்காக BC / BCM / SC / SCA / ST பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.


தரவரிசைப் பட்டியல்:
www.gascpgm.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்களுடன் சேர்ந்து கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



கலந்தாய்வுக்கு கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:

  1. இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்

  2. மாற்றுச்சான்றிதழ் (அசல் மற்றும் நகல்)

  3. 10ம் வகுப்பு, +1 மற்றும் +2 மதிப்பெண் பட்டியல் (அசல் மற்றும் 2 நகல்கள்)

  4. சாதிச்சான்றிதழ் (அசல் மற்றும் 2 நகல்கள்)

  5. ஆதார் அட்டை (அசல் மற்றும் 2 நகல்கள்)

  6. வங்கிக் கணக்குப் புத்தக நகல் – 2

  7. பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் – 5

  8. வருமானச் சான்றிதழ் – 2 நகல்கள்



தகவலுக்கு தொடர்பு எண்:
📞 79042 00784

இவ்வாறு, பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies