Type Here to Get Search Results !

தருமபுரியில் TNPSC Group-I, Group-I A தேர்வு நடைபெற்றது – மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.


தருமபுரி, ஜூன் 15-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (Group-I & Group-I A) இன்று (15.06.2025) தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 37 தேர்வு மையங்களில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 8,611 தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 6,963 பேர் தேர்வில் பங்கேற்றனர்.


தருமபுரி அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு நேர்மையாக நடைபெற 37 கண்காணிப்பு அலுவலர்கள், 7 மொபைல் யூனிட்டுகள் மற்றும் காவல் துறை உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வர்கள் தாமதம் இல்லாமல் வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆட்சியர், தேர்வு மையங்களில் செய்யப்பட்ட வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, TNPSC விதிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெறக் கேட்டுக்கொண்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies