Type Here to Get Search Results !

அரூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


அரூர், ஜூன் 15-

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரிசோதனைகள், உணவு வழங்கல் ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார். இரத்த சோகை வராமல் தடுக்கும் நோக்கில் வழங்கப்படும் இரும்புச் சத்து மாத்திரைகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.


மேலும், பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, விஷமுறிவு சிகிச்சைகள், அந்தக் குறிப்பிட்ட பிரிவுகளுக்கான மருந்துகள் இருப்பு உள்ளிட்டவை குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies