Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.


பாலக்கோடு, ஜூன் 14-

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி கூட்டரங்கில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைப்பெற்றது. இவ்விழா பன்னாட்டு அரிமா சங்க இயக்குநர் தனபாலன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு முன்னாள் தலைவர் கேசவராஜ், பொருளாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், பாலக்கோடு அரிமா சங்க புதிய தலைவராக கிரிதர், வட்டார தலைவராக கேசவராஜ், செயலாளர்களாக சக்திவேல், ராஜாமணி மற்றும் பொருளாளராக முத்து பதவியேற்றனர். இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த இயக்குநர் தனபாலன், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், பாலக்கோடு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களாக பணியாற்றும் 85 பேருக்கு புடவைகள் வழங்கப்பட்டதோடு, பாலக்கோடு பெல்லு அள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.


இதில், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் செல்வராஜ், சந்திரசேகரன், சுப்ரமணியன், ரவிவர்மா, பொன்னுசாமி, மோதிலால், தருமன், முன்னாள் பொருளாளர் சரவணன் உள்ளிட்ட அரிமா சங்கத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies