Type Here to Get Search Results !

கரும்பு விவசாயிகள் தங்களது கரும்பினை ஆலைக்கு பதிவு செய்ய வேண்டுகோள்.


தருமபுரி, ஜூன் 14-

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024–25 ஆம் ஆண்டு நடவு பருவத்திற்கு கரும்பு பதிவு செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். தற்போது வரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது கரும்பை விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட கரும்புக்கு மத்திய அரசின் ஆதாரவிலை மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகை சேர்த்து, மெ.டன் ஒன்றுக்கு ரூ.4,000/- வரை பெற வாய்ப்பு உள்ளது. மேலும், கரும்பு விவசாயிகளுக்காக வேளாண்மை பொறியியல் துறையின் வழியாக மானிய விலையில் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.


தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாய அங்கத்தினர்களுக்காக கீழ்காணும் மானியங்கள் வழங்கப்படும்:

  • பருசீவல் நாற்று நடவுக்கு: ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6,250/-

  • ஒரு பரு கரணை நடவுக்கு: ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,000/-

  • திசு வளர்ப்பு நாற்று நடவுக்கு: ஏக்கர் ஒன்றுக்கு ரூ.60,000/-

  • வல்லுநர் விதைக்கரும்பு நடவுக்கு: ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6,250/-

  • 4½ அடி அகலபார் நடவுக்கு: ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1,200/-


இதனை தொடர்ந்து, புதிய கரும்பு நடவு மற்றும் மறுதாம்பு நடவு செய்த விவசாயிகளும், இதுவரை பதிவு செய்யாத அனைவரும் தங்கள் பகுதி கரும்பு அலுவலர்களிடம் விரைவில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies