Type Here to Get Search Results !

கும்மனூரில் தமிழக அரசின் 4-ம் ஆண்டு சாதனைகள் குறித்து தெருமுனை கூட்டம்


பாலக்கோடு, ஜூன் 17:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள கும்மனூரில், திமுகவின் பாலக்கோடு மேற்கு ஒன்றியம் மற்றும் இளைஞரணி சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில், திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த முக்கிய சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. திமுகவின் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், முன்னணி உறுப்பினர்களான தேவராஜ், கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ், விஷ்ணு, விஜய், சென்னமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முக்கிய விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், தலைமை பேச்சாளர்கள் பித்தன் ரவி, இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டு, தமிழக அரசு மேற்கொண்ட முக்கிய திட்டங்களைப் பற்றி பேசினர். இதில்,

  • மகளிருக்கான விடியல் பயணம்,

  • தமிழ் புதல்வன் திட்டம்,

  • புதுமை பெண் திட்டம்


மூலம் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கப்படுவதை அவர்கள் விளக்கினர். மேலும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கான நலத்திட்டங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளை பற்றி எடுத்துரைத்தனர்.


இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், தொகுதி பார்வையாளர் அரியப்பன், ஒன்றிய செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் வெங்கடேசன், வழக்கறிஞர் அணியின் சந்திரசேகர், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நன்றியுரையைக் கூறியது இளைஞரணி துணை அமைப்பாளர் இந்திரகுமார். இதில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies