பாலக்கோடு, ஜூன் 17:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எருதுகூடஅள்ளி கிராமத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ₹32 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். முனியப்பன் தலைமையிலானது. விழாவில், ஒன்றிய பொருளாளர் குமார், மாவட்ட பிரதிநிதிகள் முத்துசாமி, மணி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் செழியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். முனியப்பன் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளைத் துவக்கி வைத்தார்.
மேலும், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் தருமன், இளைஞரணி நிர்வாகி சாமுவேல், கிளை செயலாளர்கள் வேலு, நாகராஜ், சின்னசண்முகம், துரைராஜ், கோவிந்தன், ஊர் கவுண்டர் செவத்தான், மந்திரி கவுண்டர் மாரிமுத்து, கோல்காரர் முத்து ஆகியோரும் கலந்து கொண்டனர். திமுக நிர்வாகிகள் முருகன், சிவராஜி, சரவணன், பெரியசாமி, குமார், சுரேஷ், சங்கர், நாகராஜ், பச்சியப்பன், லட்சுமணன், ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். விழா நிறைவில், மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பைரவன் நன்றியுரை நிகழ்த்தினார்.