Type Here to Get Search Results !

மறுமலர்ச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டம் பெரமாண்டப்பட்டி கிராமத்தில் நடைப்பெற்றது.


மொரப்பூர், ஜூன் 16-

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்தில் உள்ள பெரமாண்டப்பட்டி கிராமத்தில் மறுமலர்ச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி சண்முகம் தலைமையிலான கூட்டத்தில், மொரப்பூர் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் வரவேற்று பேசினார்.


இதில் மாவட்ட செயலாளர் கோ.இராமதாஸ், மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் கிருபானந்தன், மாவட்ட துணைச் செயலாளர் பட்டு ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினரும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளருமான குமரவேல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.


இவர்கள் கட்சி வளர்ச்சிப் பணிகள், சங்கொலி சந்தா சேர்த்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், ஆயுட்கால உறுப்பினர் சேர்த்தல், இல்லம் தோறும் கழக கொடி ஏற்றம் உள்ளிட்ட திட்டங்களைப் பற்றி விரிவாக உரையாற்றினர். இந்நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் சுகவனம், மாவட்ட விவசாய அணி தலைவர் வெங்கடாசலம், நிர்வாகிகள் அன்பரசு மற்றும் பெரமாண்டப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.


மேலும், இந்நிகழ்வில் சேகர் உள்ளிட்ட சிலர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி, மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் முன்னிலையில் மறுமலர்ச்சி திமுகவில் இணைந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies