Type Here to Get Search Results !

பென்னாகரம் அடுத்த மடம் கீழ் தெருவில் டேங்க் அருகே தேங்கி நிற்கும் தண்ணீர்: சுத்தப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.


பென்னாகரம், ஆடவை (ஆனி) 14-

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மடம் கீழ் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட மினி டேங்க்கில் உபரி தண்ணீர் வெளியேற வழியின்றி அந்த இடத்தில் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் பரவுவதுடன், கொசுக்கள் அதிகரித்து சுகாதாரத்துக்கு பெரும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.


மேலும், இவ்விடம் சிலர் துணிகளை அலசுவதற்கும், கழிப்பிடம் பயன்படுத்திய பிறகு இங்கேயே கழுவுவதற்கும் பயன்படுத்தப்படுவதால் நீர் தேங்கும் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மலேரியா, டைப்பாய்டு, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.


பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி, தண்ணீர் தேங்குவதைத் தவிர்த்து, இந்த பிரதேசத்தில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies