Type Here to Get Search Results !

அரூர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.


அரூர், ஆடவை (ஆனி)14-

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 27.06.2025 (ஆனி 13) அன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கோட்டப்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திரு M. ஆதம் அலி அவர்கள் மாணவர்களுக்கு காவல் நிலையத்தின் வேலை எப்படி நடக்கிறது என்ற தகவலை நேரில் கொண்டு சென்று காட்டினார். புகார் கொடுக்கும் முறை, காவலர்கள் பணிகள், கைதிகள் வைக்கப்படும் அறை போன்றவற்றை விளக்கமாக கூறினார்.


போதைப்பொருள் பயன்படுத்தினால் என்ன கெடுகள் ஏற்படும், அது வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். 18 வயதுக்கு முந்தி திருமணம் செய்தால் போக்சோ சட்டம் படி என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் கூறினார். இது மட்டுமல்லாமல், செல்போனின் தவறான பயன்பாடு எப்படி பிரச்சனைக்கு வழிவகுக்கும், காவல்துறை வழங்கும் "காவலன்" செயலியின் பயன்கள் என்னவென்பதையும் தெளிவாக கூறினார்.


முடிவில், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த மோட்டிவேஷன் வகுப்பும் நடத்தினார். இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இதை பாராட்டினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies