Type Here to Get Search Results !

2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூக அமைப்பாக மை தருமபுரி தேர்வு.


தருமபுரி, ஆடவை (ஆனி) 13 -

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளாக சீரான மனிதநேயச் சேவைகள் செய்து வரும் மை தருமபுரி அறக்கட்டளை அமைப்புக்கு, “2025 ஆம் ஆண்டின் சிறந்த சமூக சேவை அமைப்பு” என்ற விருது வழங்கப்பட்டது. இவ்விருது, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் பிரஜோஷ் அவார்ட்ஸ் இணைந்து வழங்கியவை ஆகும். விழா சென்னை அரும்பாக்கம் விஜய் பார்க் மஹாலில் இன்று (28.06.2025) சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கிருஷ்ணன் அவர்கள், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் ஆகியோருக்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.


மை தருமபுரி அமைப்பினர், தருமபுரி மாவட்டத்தில்

  • ஆதரவற்றோருக்கு இறுதி அஞ்சலி மற்றும் நல்லடக்கம்

  • தினசரி உணவு வழங்கல்

  • இரத்ததானம்
    போன்ற பல சமூக சேவைகளை மனிதநேயத்தின் அடிப்படையில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.


இதேவேளை, இந்த விருதுக்கு அமைப்பை பரிந்துரை செய்த திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் ஈவ்லின் அவர்களுக்கு மை தருமபுரி அமைப்பினர் நன்றியை தெரிவித்தனர். “என்றென்றும் நம்பிக்கையுடன், மனிதநேயத்தின் வழியில் நாம் நடக்கிறோம். இது ஒரு வெற்றிக்கொடி அல்ல, பொறுப்பு” என சதீஸ் குமார் ராஜா கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies