Type Here to Get Search Results !

பாலக்கோடு‌ ஸ்ரீராம் சில்க்ஸ் மற்றும் கே.ஜி.எம் குழும இல்ல திருமண விழா: பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நாளை நடைபெறுகிறது.


பாலக்கோடு, ஜூன் 04-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீராம் சில்க்ஸ் மற்றும் கே.ஜி.எம் குழுமத்தின் இல்ல திருமண விழா நாளை (ஜூன் 5, வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. தர்மபுரி - பென்னாகரம் சாலையில் அமைந்துள்ள ஜோதிமாகா மண்டபத்தில் நடைபெறும் இவ்விழாவிற்கு பாமக கெளரவ தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி தலைமை தாங்க உள்ளார்.


பாமக மாநில துணை தலைவர் பாடி.செல்வம் வரவேற்புரை ஆற்ற, பாமக மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.பி. மற்றும் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் செந்தில், அமமுக தலைமை நிலைய செயலாளர் டி.கே. இராஜேந்திரன், மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. கோவிந்தராஜி, மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, மங்கள கணபதி பைனான்ஸ் அதிபர் மற்றும் அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மணமக்கள் தமிழ்செல்வன் மற்றும் பவித்ராதேவி ஆகியோரின் திருமணத்தை பாமக தலைவர் நேரில் தலைமை தாங்கி நடத்தி வைக்கின்றார்.


இவ்விழாவில் அரசியல் தலைவர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துமாறு ஸ்ரீராம் சில்க்ஸ் மற்றும் கே.ஜி.எம் குழுமத்தின் சார்பில் கே.ஜி. மாதையன், டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர் மோகனபிரியா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies