Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி வளைகாரப்பட்டியில் விவசாய கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழப்பு.


மாரண்டஹள்ளி, ஜூன் 04-

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள வளைகாரப்பட்டி கிராமத்தில், விவசாய நிலத்துக்குச் சென்ற ஒருவர் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்ரமணி (வயது 59) தனது நிலத்திற்குச் செல்லும் வழியாக அசோகன் என்றவரின் நிலத்தின் வழியாக தினமும் சென்று வருவதிலிருந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல வெளியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.


இதனை கவனித்த அவரது மகன் சிவன் தேடிச் சென்று அசோகன் நிலத்தில் உள்ள கிணற்றில் தனது தந்தையின் காலணியை கண்டுள்ளார். உடனே சந்தேகமடைந்து பாலக்கோடு தீயணைப்பு துறையை தொடர்பு கொண்டார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடியபோது சுப்ரமணி தண்ணீருக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies