Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் தேர்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.


பென்னாகரம், ஜூன் 11-

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பவுர்ணமி அன்று தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம்.


இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் சுவாமி உற்சவம் நடைபெற்றது. இன்றைய நாளில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோவில் முன்பு நடைபெற்றது.


அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்ம சாமி வீற்றிருந்தார்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து தரிசனம் செய்தனர். தேரோட்டம் நடைபெறும் இடத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies