Type Here to Get Search Results !

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2025: 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விருதுக்கு 31 ஜூலைக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி, ஜூன் 11-

இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் சிறப்பான செயல்களைப் பாராட்டி அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.


விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சமூகத்தில் தெளிவான மற்றும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்திய 5 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.


இந்த விருதுக்கான விண்ணப்பங்களை https://awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். குழந்தையோ அல்லது அவரைச் சார்ந்த பெற்றோர், ஆசிரியர்கள், அலுவலர்கள் இவ்விருதுக்காக பரிந்துரை செய்யலாம்.


2025ம் ஆண்டுக்கான விருதுக்கான விண்ணப்பங்களை 31.07.2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies