Type Here to Get Search Results !

ஓய்வூதிய குறைகளை தீர்க்க முன்னாள் படைவீரர்களுக்காக சிறப்பு முகாம் – மாவட்ட அதிகாரிகள் தகவல்.


தருமபுரி, ஜூன் 18-

முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் முகாம், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில், 30.06.2025 அன்று திருச்சி மாவட்டம் மன்னார்புரம் இராணுவ பயிற்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

தருமபுரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதில் பங்கேற்று ஓய்வூதியம் மற்றும் PPO தொடர்பான பிரச்சனைகளுக்கு நேரடியாக தீர்வு பெறலாம். இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயர், கைபேசி எண், முகவரி ஆகிய விவரங்களை 8807380165 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். கூடுதல் தகவலுக்கு www.cdachennai.dad@hub.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.


மேலும், பாதுகாப்பு அமைச்சரால் தொடங்கப்படும் 6 விழிப்புணர்வு வாகனங்கள், ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று ஓய்வூதியக்காரர்களின் ஆவணக் குறைகளை நேரில் ஆய்வு செய்து தீர்வு செய்யும். இந்த குழு வாகனங்கள் 02.07.2025 மற்றும் 03.07.2025 ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் வருகை தர உள்ளன.


இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் முன்னாள் படைவீரர்கள், தங்களது அசல் பணிச்சான்று, PPO ஆணை, ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனைத் தெரிவித்துள்ள தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies