Type Here to Get Search Results !

தருமபுரி இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தருமபுரி, ஜூன் 2:

தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்களை நியமிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.


இந்நியமனம், 2015 ஆம் ஆண்டு இளைஞர் நீதி சட்டம் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படுகிறது. குறைந்தது ஒரு பெண் உறுப்பினர் இடம்பெறும் வகையில் மொத்தம் இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதுவொரு அரசுப் பணி அல்ல.


விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளை கொண்டிருத்தல் வேண்டும்:

  • குழந்தைகள் நலன், கல்வி, உடல்நலம் அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் (அல்லது)

  • குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல், சட்டம் போன்ற துறைகளில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிவது

  • வயது 35-க்கும் மேல், 65-க்கும் குறைவாக இருக்க வேண்டும் (பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் நாளின் அடிப்படையில்)


விண்ணப்ப படிவம் தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரில் பெறலாம் அல்லது http://dsdcipimms.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.


முடிவு தேதி:
தகுதியுள்ள நபர்கள், தங்கள் விண்ணப்பங்களை 19.06.2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்:

இயக்குநர்,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை,
எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை – 600 010.


தேர்வு: தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நடைபெறும். அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies