Type Here to Get Search Results !

தருமபுரியில் சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் – அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி, மே 29:

தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதந்திர சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்று, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


இக்கூட்டத்தில், இனி வரும் நாட்களில் இருசக்கர வாகனங்களில் அரசு அலுவலகங்களுக்கு வரும் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயமாக தலைக்கவசம் (Helmet) அணிந்து வர வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். இது சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான கட்டாய நெறிமுறையாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.


அதேபோல, அரசு அலுவலகங்களுக்கு தங்களது கோரிக்கைகளுக்காக வருவோர் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களும் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், இதனை துறை அலுவலகங்களின் பொறுப்பு அலுவலர்கள் கண்காணித்து, செயல்பட வேண்டுமெனவும் அவர் உத்தரவு வழங்கினார்.


முன்னெச்சரிக்கையாக சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, தருமபுரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதில் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies