Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை வாகனம் ஏலம் மூலமாக விற்பனை.


தருமபுரி, ஜூன் 18-


தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பயன்பாட்டில் இருந்த Bolero LX மாடல் வாகனம் (வாகன எண்: 110986 2345) தற்போது பழுது காரணமாக கழிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் மதிப்பு ரூ.1,25,000/- என தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த வாகனம் 23.06.2025 (திங்கட்கிழமை) அன்று மாலை 3.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறு ஏலத்தில் விற்பனைக்கு விடப்பட உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், குறித்த தேதியில் நேரில் வந்து விலை விபரங்களை பெறலாம் என்றும், விவரங்களை அறிந்து ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் திரு. வெ. லோகநாதன் அவர்கள் அறிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies