Type Here to Get Search Results !

தருமபுரியில் பொதுமக்களின் குறை தீர்க்கும் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.


தருமபுரி, ஜூன் 18 –

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (18.06.2025) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் பெட்டிஷன் மேளா சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்வு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஸ்வரன், B.Com., B.L., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு) திரு. K. ஸ்ரீதரன், தருமபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. A. சிவராமன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொது மக்களின் மனுக்களை பெற்றனர்.


மொத்தம் 71 மனுக்கள் ஏற்கப்பட்டு, அனைத்தும் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் மூலம் உடனடியாக விசாரணை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது. இத்துடன், மேலும் 32 புதிய மனுக்கள் புதிதாக பெறப்பட்டன. பொதுமக்களுடன் நேரில் தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies