Type Here to Get Search Results !

மோலையரனூர் அருகே தடுப்பு சுவர் இல்லாத கிணறு – விபத்து ஏற்படும் அபாயம் குறித்து மக்கள் கவலை.


பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 12-

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மோலையரனூர் ஊராட்சி தேவராஜ்பாளையம் வழியாக மோலையரனூருக்கு செல்லும் பாதையில், மிகப்பெரிய ஒரு திறந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றிற்கு அருகே எந்தவிதமான தடுப்பு சுவரும் இல்லாததால், அப்பகுதியில் நடக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அபாயமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. "தடுப்பு சுவர் இல்லாத இந்த கிணற்றினால் விபத்துகள் நேரிட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies