Type Here to Get Search Results !

காரிமங்கலம், மாரண்டஅள்ளியில் ரூ.50 லட்சத்தில் புதிய குளிர்சாதன நூலகங்கள் திறப்பு – ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம் தொடங்கி வைத்தார்.


பாலக்கோடு, ஜூன் 12-

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சிகளில், தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில், குளிர்சாதன வசதியுடன் கூடிய இரண்டு புதிய நூலகங்கள் கட்டப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.


இந்த நூலகங்களுக்கான மொத்த நிதி ரூ.50 லட்சம் தொகையை, ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் அவர்கள் தனது உறுப்பினர் நிதி வழியாக ஒதுக்கீடு செய்திருந்தார். நூலக கட்டுமான பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நூலக திறப்பு விழா முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ. திரு. கே.பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், அரூர் எம்.எல்.ஏ. சம்பத்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.வி. ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் செந்தில், கோபால், நகர செயலாளர்கள் கோவிந்தன், ராஜா உள்ளிட்ட பலர் முன்னிலையில் இருந்தனர்.


ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம், நூலகங்களை ரிப்பன் வெட்டி மற்றும் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், “அதிமுக ஆட்சியில் கல்வி, மாணவர் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த நூலகங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவியல் வளர்ச்சிக்கும், போட்டித் தேர்வுகளிலும் வெற்றிக்கும் ஊக்கம் தரும்,” எனக் குறிப்பிட்டார்.


இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் அண்ணாமலை, இளைஞர் அணி இணை செயலாளர் வெற்றிவேல், முன்னாள் நகர செயலாளர் சங்கர், விமலன், மாவட்ட பிரதிநிதி ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ராஜா, அசோக், வெங்கடேசன், அனிதா ரமேஷ்குமார், சுரேஷ் மற்றும் பல மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies