காரிமங்கலம், ஆடவை (ஆனி) 12-
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து, நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று (26.06.2025 – ஆனி 12) நடைபெற்றது. இந்த பேரணிக்கு உதவி கோட்ட பொறியாளர் திருமதி மங்கையர்க்கரசி அவர்கள் தலைமை வகித்தார். பேரணி காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கி, பஸ்நிலையம், கடைவீதி, காவல் நிலையம், ராமசாமி கோயில் மும்முனை சந்திப்பு, மொரப்பூர் சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சந்திப்பு, மின்சார வாரியம் வரை ஊர்வலமாகச் சென்றது.
"தலைக்கவசம் உயிர்க்கவசம்", "வளைவில் முந்தாதே", "மஞ்சள் கோட்டை தாண்டாதே", "மித வேகம் மிக நன்று", "சாலையில் சாகசம் வேண்டாம்", "மது அருந்தி வாகனம் ஓட்டாதே" ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் கோஷமிட்டு ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் உதவிப்பொறியாளர் திரு. ரஞ்சித், சாலை ஆய்வாளர்கள் மற்றும் துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
.gif)

