Type Here to Get Search Results !

தருமபுரியில் Crest India Foundation சார்பில் தையல் பயிற்சி பெறும் மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் விழா.


தருமபுரி, ஆடவை (ஆனி) 12-

தருமபுரி மாவட்டத்தில் Crest India Foundation சார்பில், இந்திய அரசின் ஜவுளி துறை அமைச்சக உதவியுடன், தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று (26.06.2025 – ஆனி 12) சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி, ஜவுளி தொழிலதிபர் சுரேஷ் பாபு, மற்றும் தருமபுரி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத் தலைவர் வெங்கடேஷ் பாபு ஆகியோர் பங்கேற்று, பயிற்சி பெற்ற மகளிருக்கு சான்றிதழ்கள் வழங்கி, சிறுகுறு தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.

 

இதனுடன், நிகழ்ச்சியில் தருமபுரி நகர திமுக செயலாளர் நாட்டான் மாது, மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.எல். காவேரி, நகர மன்ற உறுப்பினர் ஜெகன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம், துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன், ஓட்டுநர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies