பேரூராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில், செயல் அலுவலர் திருமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இயேசுராஜா, மற்றும் தலைமை ஆசிரியர் செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் சம்பத், பேரூராட்சி வரவு-செலவு கணக்கை வாசித்தார்.
கூட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் விழிப்புணர்வு, பள்ளி இடைநிற்றலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை, குழந்தை தொழிலாளர் தடுப்பு, போதை மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவை குறித்து தீர்மானிக்கப்பட்டது.
இதில் துணைத் தலைவர் கார்த்திகா, கவுன்சிலர்கள் சுகந்தி ரமேஷ், அனிதா ரமேஷ், அபிராமி காந்தி, கீதாவடிவேலு, ரீனா குழந்தைவேல், புவனேஸ்வரி மணிகண்டன், கார்த்திகேயன், யதிந்தர், கோவிந்தன், விஸ்வநாதன், சிவக்குமார், வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.