Type Here to Get Search Results !

பாலக்கோடு மைதீன் நகரில் ரூ.68 இலட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை: பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி பூமிபூஜை.


பாலக்கோடு, ஆடவை (ஆனி) 13 -

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட மைதீன் நகரில் ரூ.68 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிக்காக, பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் இன்று பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக மேற்கு மாவட்ட பொருளாளர் முருகன், நகர அவைத் தலைவர் அமானுல்லா, கவுன்சிலர் பத்தேகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தத் திட்டத்தின் கீழ் 6-வது வார்டில் உள்ள 9 தெருக்களுக்கும், 2-வது வார்டில் உள்ள 2 தெருக்களுக்கும் புதிய பேவர்பிளாக் சாலைகள் அமைக்கப்படுகிறது.


பேரூராட்சி சிறப்பு நிதி மூலமாக இந்தப் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முக்கிய திட்டமாக இது கருதப்படுகிறது. இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் வகாப், ரூஹித், சாதிக், தாஹசீனா இதாயத்துல்லா, பிரியாகுமார், சுற்றுச்சூழல் அணி நகர அமைப்பாளர் சரவணன், நெசவாளர் அணி பட்டு அஜிசுல்லா, ஒன்றிய பிரதிநிதிகள் பெரியசாமி, அன்வர், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மன்சூர், பழனிசாமி, கிளை செயலாளர்கள் கணேசன், ராஜீ, மியான், நிர்வாகிகள் சக்திவேல், சிவா, துரை, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies