பாலக்கோடு, ஆடவை (ஆனி) 16-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில், கவுன்சிலர் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் இந்துமதி, துணைத் தலைவர் தாஹசீனா இதயாத்துல்லா முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் பத்மா வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில், அண்ணா, நூற்றாண்டு, அக்ரஹகாரம், கல்கூடப்பட்டி, உருது துவக்கப்பள்ளி உள்ளிட்ட ஐந்து பள்ளிகளுக்கும், 1, 6, 12, 16-வது வார்டுகளில் மொத்தம் 9 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கல்கூடப்பட்டி அங்கன்வாடி மையத்தின் சமையலறையை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டது.
கவுன்சிலர்கள் மோகன், சாதிக் பாஷா, சரவணன், ரூஹித், விமலன், குருமணி, ஜெயந்தி மோகன், லட்சமி ராஜசேகர், பிரியா குமார், தீபா, ஆயிஷா, சிவசங்கரி, நாகலட்சுமி உள்ளிட்டோர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர்.