பாப்பாரப்பட்டி, ஆடவை (ஆனி) 16-
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பாப்பாரப்பட்டி கிராமத்துக்கு அண்மையிலுள்ள கோரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த இடும்பன் (வயது 65) என்பவர், குடும்பத்துக்குள் ஏற்பட்ட மன உளைச்சலால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டது போலத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இடும்பன் திருமணமானவர். அவருக்கு இரு பெண்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 26ம் தேதி, குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று, பாப்பாரப்பட்டி அருகேயுள்ள மாமரத்துப்பள்ளம் பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம் பக்கத்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பாரப்பட்டி போலீசார், இடும்பனின் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
🔴 தற்கொலை ஒரு தீர்வல்ல!
உங்கள் பிரச்சனைகள் தற்காலிகமானவை. உதவிக்காக யாரையாவது நம்பிக்கையுடன் அணுகுங்கள். உங்கள் உயிர் மதிப்புமிக்கது.
📞 தமிழ்நாடு அரசு மனநலம் ஆலோசனை உதவி எண் – 104 (24 மணி நேரமும் செயல்படும் இலவச சேவை)