பாலக்கோடு, ஆடவை (ஆனி) 16-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 12-வது வார்டில் அமைந்துள்ள சானார் தெருவில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த சாலை பணிகள் 15-வது நிதிக்குழு மானியம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான பூமிபூஜை நிகழ்வு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைபெற்றது. திமுக சுற்றுசூழல் அணி நகர அமைப்பாளர் சரவணன், நகர அவைத் தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாலக்கோடு 12-வது வார்டு சானார் தெரு, சாவடி தெரு, முருகன் கோயில் தெரு, பள்ளிகூடத்தான் தெரு மற்றும் ஞாண பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் இந்த பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் வகாப், ரூஹித், சாதிக், மோகன், திமுக ஒன்றிய பிரதிநிதிகள் பெரியசாமி, அன்வர், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மன்சூர், பழனிசாமி, தொண்டர் அணி அமைப்பாளர் குமரன், கிளைச் செயலாளர்கள் கணேசன், ராஜீ, நிர்வாகிகள் சக்திவேல், சிவா, துரை, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.